சிறப்புத் தள்ளுபடி அறிவிப்புடன் வெளியான ரியல்மி ஸ்மார்ட்போன்கள்!

இதுவரை ரியல்மி ஆறு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துவிட்டது. ஏற்கனவே ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனையாகி வரும் நிலையில், விற்பனையை மேலும் அதிகப்படுத்த சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் மொபைல் பொனாசா விற்பனை இன்று (மார்ச் 25) ஆரம்பமாகி மார்ச் 28 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் இந்த மொபைல் பொனாசா விற்பனை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

சிறப்பு விற்பனையில் ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி யு1 மற்றும் ரியல்மி 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விற்பனையில் ரியல்மி 3 பேஸ் வேரியண்ட் விலை ரூ.8,999 என்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.500 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இதே விற்பனையில் ரியல்மி 3 ரேடியண்ட் புளு வெர்ஷனும் விற்பனை செய்யப்படுகிறது.

இத்துடன் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தள்ளுபடி விற்பனை அறிவிப்பானது நான்கு நாட்களுக்கு மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.