சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர்!

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியில் உள்ள 16 வயதுடைய சிறுமியின் வீட்டிற்குச் சென்று நல்லுறவுடன் பழகி வந்த ஒருவரே இவ்வாறு சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த 16 வயது சிறுமிக்கு வயிற்று வலி என நேற்று (06) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, குறித்த சிறுமி கர்ப்பம் என தெரியவந்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதியன்று ஓமந்தை பொலிசாரிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவி வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து குறித்த சம்பவத்தில் சந்தேகத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து நொச்சிக்குளம் பாடசாலையின் ஆசிரியரான குமாரசிங்கம் இந்திரசிங்கம் (50) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.