சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலியப் பேராயருக்கு கிடைத்த தண்டனை!

அவுஸ்திரேலியப் பேராயர் ஜார்ஜ் பெல்லுக்குத் (George Pell), தேவாலயப் பாடகர் குழுவைச் சேர்ந்த இரு சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக ஆறு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் குற்றவாளி என ஆக மூத்த கத்தோலிக்க அதிகாரி பெல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என்று கூறிவரும் அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்தார்.