சிலாபத்தை தாக்கிய சுழல் காற்று! பல வீடுகள், கட்டடங்களுக்கு பாரிய சேதம்

சிலாபம் – இரணவில பிரதேசத்தில் திடீரென வேகமான சுழல் காற்று வீசியுள்ளது.

இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் சில சேதமடைந்துள்ளன. இன்று, அதிகாலை 1.15 மணியளவில் வேகமான சுழல் காற்று வீசியதாகக் குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் இரணவில பிரதேசத்திலுள்ள மீனவர் வாடிகளும் முற்றாக சேதமடைந்துள்ளது.

தற்பொழுது தற்காலிகமான வாடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

டொனேடோ வகையான சுழல் காற்றே சிலாபம் நகரை கடந்துச் சென்றுள்ளதாக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.