சில்லி மட்டன்

சில்லி மட்டனை காரசாரமாக எப்படி செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மட்டன் : அரை கிலோ
வெங்காயம் – 4
தக்காளி – 1
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் சாஸ் – 1/2 டீஸ்பூன்
கேசரி தூள் – ஒரு சிட்டிகை
மஞ்சள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மட்டன் வேக வைத்த நீர் – 1 கப்

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, மட்டனை நன்றாக கழுவி சதுர வடிவில் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

பின்பு அதனை குக்கரில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்துக் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

பின்பு உப்பு, தக்களி சாஸ், சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் சாஸ், சோயா சாஸ் என அனைத்து சாஸ் வகைகளையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

அடுத்ததாக வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கவும்.

அடுத்து எடுத்து வைத்துள்ள மட்டன் தண்ணீர், கேசரி தூள் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் எல்லாம் வற்றியதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடுங்கள்.

இப்போது சுவையான சில்லி மட்டன் ரெடி.