சிவகார்த்திகேயன் படத்தைக் கைப்பற்றியது இந்த நிறுவனமா?

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார்.