சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

திடீர் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரை, யாத்திரிகள் மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி – தவுலகல பிரதேசத்தினைச் சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான, ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.