சீனாவில் பயங்கர நிலநடுக்கம்!-

இந்திய -சீன எல்லைப்பகுதியை ஒட்டிய திபெத்தை மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளி 4 ஆக பதிவானது. இன்று (சனிக்கிழமை) காலை 6.34 மணிக்கு பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நேரிட்டதாக அமெரிக்காவில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இத்தகைய நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தக் கூடியது என்று புவி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சீனாவின் மக்கள் தொகை அதிகமாக உள்ள சீசாங் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.