சீமான்- கயல்விழி தம்பதியினருக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை: வெளியான புகைப்படம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்- கயல்விழி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அவர் தன் ஆண் குழந்தையை கொஞ்சும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.

தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீமானின் திருமணம் தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது.

அதோடு, ’அ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட தாலியை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை கையில் ஏந்தி சீமான் கொஞ்சும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.