சுஜா வருணி – சிவக்குமார் தம்பதியினருக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்

ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மிளகா என்ற படத்தின் மூலம் நடிகை சுஜா வருணி பிரபலமானார்.

தற்போது வாடீல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பிக்பாஸ் மூலம் இவர் மிகவும் பிரபலம் ஆனார்.

அண்மையில் இவரும் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் மகன் சிவாஜி தேவ் என்ற சிவக்குமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் சுஜாவின் அப்பா ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்துள்ளார்.

இதையடுத்து மருமகன் மற்றும் மகளை தனது வீட்டிற்கு அழைத்து தலைவாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.

இது குறித்து சுஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,

“என்னையும், அத்தானையும் கமல் அப்பா மதிய உணவுக்கு அழைத்து விருந்தளித்தார்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.