சுறா மீன் பொடிமாஸ்

சுறா மீன் பொடிமாஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

சுறா மீன் – 1/2 கிலோ
வெங்காயம் – நான்கு
பச்சை மிளகாய் – 6
பூண்டு – 10
சோம்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சுறாமீனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும்.

பின்பு பத்து நிமிடம் கழித்து மீனை இறக்கவேண்டும்.

பின் அதனுடன் மிளகாய் தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெயில் போட்டு வதக்கிக் கொண்டு அதில் சுறாமீன் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கிளறவும்.

அடி பிடிக்காமல் தீயாமல் முறுவலாக ஆனதும் தேங்காய் மூடியை துருவி அதில் கொட்டி கிளறி இற்றக்கவும்.

சூடான சுறா மீன் பொடிமாஸ் ரெடி