சுவாசமின்றி திணறும் தேகமாய்..!!

நகரும் நிமிடங்கள்
உன் நினைவுகளின்
ஆதிக்கமாய்
கடந்து செல்கிறது
என்னுள்ளே..!!

உனக்கான கற்பனைகள்
ஆயிரம்
எண்ணப் பெருவெளி எங்கும்..!

உன் கரம் பிடிக்கும்
நாளுக்கான காத்திருப்புடன்
விழியோரம் பொங்கும் கனவுகள்..!!

சுவாசமின்றி திணறும்
ஒரு தேகமாய் உனக்காக
காத்து கிடக்கிறேன்…!!

-மதுமிதா-
அவுஸ்திரேலியா