சுவையான கேரட் ஊறுகாய்

கேரட்டில் சாலட், பொரியல், சம்பல் என்று பலவிதமாக ஒவ்வொருவரும் சமையல் செய்து சாப்பிடுவார்கள்.

கேரட்டை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

கேரட் – கால் கிலோ
எலுமிச்சை பழம் – ஐந்து
பச்சை மிளகாய் – பத்து
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி
கடுகு – ஒரு தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை பெரிய பல் உள்ள துருவலில் துருவி வைத்துக் கொண்டு, எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி வையுங்கள். பின்பு ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.

சூப்பரான உடனடி கேரட் ஊறுகாய் ரெடி.

குறிப்பு : விரும்பினால் கேரட்டை நீளமான துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளலாம்