சூப்பரான பிரெட் பொரியல்!

பிரெட்டில் பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் – 15
நெய் – 50 கிராம்
தக்காளி – 2
குடை மிளகாய் – 1
இஞ்சி விழுது – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 ஸ்பூன்

தாளிக்க…

கிராம்பு – 1
ஏலக்காய் – 1
பட்டை – 1 சிறிய துண்டு
சோம்பு – ½ ஸ்பூன்

செய்முறை :

பிரெட்டை ஓரங்களை நீக்கி விட்டு துண்டுகளா வெட்டி வைத்துக் கொண்டு, குடைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்

வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு தாளித்து பின் இஞ்சி விழுது சேர்தது வதக்கிக் கொள்ளுங்கள்.

பின்பு தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது கிளறி அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து லேசாக கிளறி எடுக்கவும்.

இதில் சிறிது சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.

இப்போது சூப்பரான பிரெட் பொரியல் ரெடி.