சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டை தனதாக்கினார் செந்தில்.!!

இந்தியாவில் இயங்கி வரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததே.

இந்த நிகழ்சில் தமது திறமையை நிரூபிக்க பல இளைஞர்கள் யுவதிகள் பங்கேற்றனர். அந்த வகையில் கிராமப்புறத்தில் இருந்து தனது மனைவியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தான் செந்தில்.

தனது கிராமியப் பாடல்களால் மக்களின் மனங்களை கொள்ளை கொண்டு கடைசிச் சுற்றுக்கு தெரிவானார் செந்தில்.

இன்று (15) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிரான்பினாலேயில் பல பிரபலங்கள் முன்னிலையில் பாடி மக்களின் பலத்த ஆதரவினால் டைட்டில் வின்னராக தெரிவுசெய்யப்பட்டு முதல் பரிசான 50 லட்சம் பெறுமதி வாய்ந்த வீட்டினை தனதாக்கிக் கொண்டார்.