சூப்பர் வசதியுடன் அறிமுகமான புதிய ஹெட்போன்

சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சோனி WH-CH700N என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஹெட்போன்களில் சோனி நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் சத்தத்தை தடுக்கும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் (Artificial Intelligence Noise Cancellation) தொழிநுட்பத்தை வழங்கியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் வெளிப்புற சூழலுக்கு ஏற்ப சத்தத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும்.

இந்த ஹெட்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது.

இத்துடன் ஹெட்போன்களை தொடாமலேயே வாய்ஸ் கமாண்ட்களை செயல்படுத்திக் கொள்ள ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஹெட்போன்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் ஆகும் என சோனி தெரிவித்துள்ளது.

இத்துடன் மியூசிக் செட்டிங்கிற்கு ஏற்ப அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனுடன் க்விக் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஹெட்போன்களை ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த வெறும் பத்து நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்தாலே போதுமானது.

நாடு முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் சோனியின் புதிய WH-CH700N ஹெட்போன்களை வாங்க முடியும்.

இந்தியாவில் இதன் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.