செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் பகீர் எச்சரிக்கைத் தகவல்!

செல்போன் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் பாதிப்புகள் ஏற்படுமென மின்கதிர்வீச்சு பேராசிரியர்கள், நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை மூலம் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாம் பயன்படுத்தும் செல்போனுக்காக லட்சக்கணக்கான செல்போன் கோபுரங்கள் மற்றும் வீடுகள் தோறும் இணைக்கப்பட்டுள்ள வை-பை போன்றவை 24 மணி நேரமும் கதிர்வீச்சுகளை வெளியேற்றுகின்றன.

அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மனிதர்களை மிகவும் பாதிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

ஒருவர் 20 முதல் 30 நிமிட நேரம் தொடர்ந்து செல்போன்களை பயன்படுத்தினால் அவருக்கு 10 ஆண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

1985 ஆம் ஆண்டு செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை நடந்த ஆய்வில் மூளை புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து மக்களிடம் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

செல்போனை அருகில் வைத்து தூங்குவதாலும், வாகனங்களில் போகும்போது பயன்படுத்துவதாலும் கதிர்வீச்சுக்கு ஆளாகும் நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே செல்போன் பயன்படுத்துவோர் அதிகளவில் உள்ளனர். இந்த தகவலினை எச்சரிக்கையாகக் கொண்டு செல்போனைப் பயன்படுத்துவது நல்லது.