செளந்தர்யா திருமணத்தில் நடிகர் தனுஷ் ஒதுங்கி நின்றமைக்கு காரணம் இதுதானா?

நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா – விசாகன் திருமணம் நேற்று நடந்து முடிந்தது.

இவர்களது திருமணத்தின் மற்றொரு பகுதியாக தனுஷை பற்றிய பேச்சும் அதிக அளவில் உள்ளது. அதாவது மருமகன் தனுஷ் அதிகளவில் திருமணத்தில் முகம் காட்டவில்லை என்பதுதான்.

திருமணத்தில் பங்கேற்றாலும், குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவில்லை, பலரிடமும் சகஜமாக பேசாமல் ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்திற்கான அவரது கெட் அப் வெளியே பரவி விட கூடாது என்ற காரணத்திற்காக அதிக புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளவில்லை.

ரஜினிகாந்திற்கு தொழில் பக்தி அதிகம். இதை அவர் பின்பற்றி வருகிறார்.

அதனால்தான் திருமண கொண்டாட்டங்களில் ஓரமாக நின்றிருக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.