சைவ உணவிற்கு மாறிய கோலி

சைவ உணவிற்கு மாறிய பிறகு முன்பைவிட வலிமையாக இருப்பதாக உணர்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்று ‘‘கோலி கடந்த நான்கு மாதங்களாக சைவத்திற்கு மாறியுள்ளாராம்.

தற்போது அவரது செரிமான சக்தி அதிகரித்துள்ளதாகவும், முன்பைவிட வலிமையாக இருப்பதாக உணர்வதாகவும், இறைச்சி, முட்டை போன்றவற்றை அவர் கைவிட்டது என்பதே தெரியவில்லையாம்’’ என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உணவு கட்டுப்பாடு அவரது உடலை மட்டும் சிறப்பாக வைத்திருக்க உதவியதோடு, ஆடுகளத்தில் மனதளவில் சிறப்பாக செயல்படவும் உதவுகிறதாம்.

புரோட்டீன் சத்திற்காக இறைச்சி, முட்டை, பாலில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை மேற்கொண்டார். கடந்த நான்கு மாதத்தில் இருந்து திடீரென அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியுள்ளார்