ஜனவரி 13: வான்கூவர் தீவில் குடியேற்றம் ஆரம்பமானது!

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வான்கூவர் தீவு, பிரிட்டிஷ் மற்றும் ஸ்பானிஷ் நாடுகளால் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த தீவு பிரிட்டிஷ் கடற்படை தலைவரான ஜார்ஜ் வான்கூவரின் பெயரைக் கொண்டு பெயரிடப்பட்டது. 1791 மற்றும் 1794 ஆம் ஆண்டுகளுக்கு இடையே பசிபிக் வடமேற்கு கரையோரத்தை ஆய்வு செய்த ஜார்ஜ் வான்கூவரின் பெயரிடப்பட்ட பல வட அமெரிக்க இடங்களில் இத்தீவும் ஒன்றாகும்.

வான்கூவர் தீவு உலகின் 43 வது பெரிய தீவாகும். கனடாவின் மிகப்பெரிய தீவுகளில் இது 11 ஆவது மிகப்பெரிய தீவாக உள்ளது.

மான்ட்ரியல் தீவுக்குப் பிறகு இது கனடாவின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட தீவாகவும் வான்கூவர் தீவு உள்ளது.

வான்கூவர் தீவின் மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 799,400 ஆக இருந்தது. இந்த மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதி மக்கள் (367,770) உயரிய விக்டோரியாவின் பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர்.

இந்த நிலையில் 1849 ஆம் ஆண்டு வான்கூவர் தீவில் குடியேற்றம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.