ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியாகிய அதிவிசேட வர்த்தமானி!

இலங்கையில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.