ஜனாதிபதியின் முடிவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய மட்டக்களப்பிற்கான விஜயத்திில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய அவரது பயணம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம், ஜனாதிபதி தலைமையில் இன்று காலை இடம்பெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இறுதி நேரத்தில் ஜனாதிபதியின் மட்டக்களப்பிற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விஜயம் இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் எதனையும் ஏற்பாட்டு குழுவினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.