ஜப்பானிய வீராங்கனை வெற்றி!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் விளையாட ஜப்பானிய வீராங்கனை நயோமி ஒஸாகா தகுதிபெற்றுள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற அரையிறுதிப்போட்டியில் நயோமி ஒஸாகா 6ற்கு 2 6ற்கு 4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

20 வயதுடைய ஒஸாகா நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் தனது விருப்பத்திற்குரிய வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்கொள்ளவுள்ளார்.