ஜாங்கிரிக்கு விரைவில் டும் டும்!

ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகை அவரது உறவினர் மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகையான இவர் ஜாங்கிரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி திருமணம் நடைபெற இருக்கிறது.

மோசஸ் ஜோயல் தமிழ் திரையுலகில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.