ஜூன் 6 இல் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்!

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஜூன் 6 ஆம் திகதி நோக்கியா 6.2 என்கிற நோக்கியா X71 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் நோக்கியா தனது புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில் டீசர்களை வெளியிட்டது.

எனினும், இந்த டீசர்களில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெறவில்லை.

இந்நிலையில், நோக்கியா அநியூ என்ற ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனினை இதே நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக நிகழ்வு நடைபெறும் அதே நாளில் இந்தியாவிலும் நோக்கியா நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்திய சந்தைக்கென சில அறிவிப்புகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

நோக்கியா அநியூ ட்விட்டர் பதிவில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளை போன்று 290 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,200) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.