ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ!

வயர்லெஸ் ஸ்பீக்கர்களை செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே எடுத்துச் செல்லலாம் என்பதால் இவை அதிக பிரபலமாகி வருகின்றன.

அந்த வரிசையில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்திருக்கிறது.

ஆட்டம் (Atom) என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரின் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிம்னி விளக்கு தோற்றம் கொண்டிருக்கும் புதிய ஆட்டம் ஸ்பீக்கர் விமர்சனத்தை தொடர்ந்து பார்ப்போம்.

முட்டை வடிவம் கொண்ட வடிவமைப்பு சிம்னி விளக்கை நினைவூட்டுகிறது.

ஸ்பீக்கரில் 60 எல்.இ.டி. விளக்குகள் வழங்கப்பட்டு இருப்பதால், மின்விளக்கு உண்மையான தீ எரிவது போன்ற அனுபவத்தை வழங்குகிறது.

340 கிராம் எடை கொண்டிருக்கும் ஸ்பீக்கர் மெல்லியதாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது.

இதனை ஸ்பீக்கர் மட்டுமின்றி படுக்கையறை மின்விளக்ககாகவும் பயன்படுத்தலாம்.

பேட்டரி பேக்கப் நேரத்தை பொறுத்த வரை மின்விளக்கு எரியும் போதும் நீண்ட நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. ஸ்பீக்கர் கொண்டு தொடர்ச்சியாக திரைப்படம் மற்றும் பாடல் உள்ளிட்டவற்றை இடைவெளியின்றி பயன்படுத்தலாம்.

இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.