ஜோடியாக சுற்றும் தீபிகா-ரன்வீர்: அதிருப்தியில் இயக்குனர்!

‘பத்மாவதி’ இந்தி பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தீபிகா தலைக்கு விலை நிர்ணயம் செய்து இருக்கிறார்கள்.

பல மாநிலங்களில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணி பத்மாவதியை அவமதித்துவிட்டதாக கூறி சில அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன.

இதனால் கடந்த முதலாம் திகதி ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படத்தை வெளியிடும் திகதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் யாரையும் அவமதிக்கும் வகையில் எடுக்கப்படவில்லை என்று இதன் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி விளக்கம் அளித்துள்ளார்.

‘பத்மாவதி’ படத்தில் தீபிகா படுகோனே ராணி பத்மாவதியாகவும், ரன்வீர் சிங் மன்னர் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்திருக்கிறார்கள்.

எனவே இருவரும் ஜோடியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று இயக்குனர் பன்சாலி கூறியும் அதனைக்கேட்காது இருவரும் ஜோடியாக விருந்துக்கு சென்றுள்ளனராம்.

இந்தி பட இயக்குனர் ஜோயா அக்தர் தனது வீட்டில் நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார்.

தீபிகாவும், ரன்வீரும் இதில் கலந்துகொண்டனர். அங்கிருந்து புறப்படும் போது இருவரும் கை கோர்த்தபடி சென்றுள்ளனர்.

தான் சொன்னதை கேட்காமல் இருவரும் ஊர்சுற்றி வருவதால், இருவர் மீதும் இயக்குனர் அதிருப்தியில் உள்ளாராம்.