ஜோதிகாவின் சட்டையைக் கிழித்த பொலிஸ்! நள்ளிரவில் நடந்த சண்டை

ரயில் நிலையத்தில் பொலிஸ் காதல் ஜோடி ஒன்று அனைவர் முன்னிலையிலும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர்.

இச்சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வெளியே ரயில்வே பாதுகாப்பு படையில் பொலிசாக இருக்கும் குமார் என்பவரும் அதே போன்று ஜோதிகாவும் பொலிசாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்குள் தொலைபேசி மூலம் பேசி காதல் மலர்ந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 5 ஆம் திகதி மதியம் குமார், ஜோதிகாவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அழைப்பினை ஏற்படுத்திய போதும் ஜோதிகா போனை எடுக்கவில்லை.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஜோதிகா போனை எடுத்து பேசியுள்ளார். தனக்கு இரவுப்பணி என்றும், இரவு ரயில் நிலையம் வா பேசிக்கொள்வோம் என ஜோதிகா கூறியுள்ளார்.

நள்ளிரவு 1.30 மணிக்கு குமார், போதையில் ரயில் நிலையம் வந்து ஜோதிகாவை சந்தித்துள்ளார்.

1 மணி நேரமாக என் போனை எடுக்கவில்லை. அப்படி யாரிடம் பேசிக்கொண்டிருந்தாய் என கேட்டுள்ளார்.

‘‘நீ என் புருஷனா, என்னிடம் இத்தனை கேள்வி கேட்கிறாய்’’ என ஜோதிகா கேட்க, இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ஒருவரையொருவர் கட்டிப்புரண்டு சண்டையில் சட்டையைக் கிழித்துக் கொண்டனர்.

பொதுமக்கள் முன்னிலையில் பொலிசாரே கட்டிப்புரண்டு சண்டையிடுவதை அனைவரும் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த களேபரத்தில் ரயில்வே பொலிசாக இருந்த எஸ்.ஐ. வெளியில் வந்து இருவரையும் விலக்கி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இதுதொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.