டிக் டாக் பிரபலத்தை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

டெல்லியில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான நபர் ஒருவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த 24 வயதான இளைஞர் மோஹித் மோர் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், டிக்-டாக் ஆப்பில் அடிக்கடி உடற்பயிற்சி குறித்த வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த வீடியோக்கள் மூலம் டிக்-டாக் ஆப்பில் பிரபலமான இவரை 5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இதனிடையே வழக்கம்போல உடற்பயிற்சிக்காக டெல்லியில் உள்ள உடற்பயிற்சி நிலையத்துக்கு சென்ற மோஹித், அருகே இருக்கும் ஜெராக்ஸ் கடையில் தமது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மொஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி பொலிஸார் கொலையாளிகளின் சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த மோஹித்தின் டிக் டாக் பதிவுகளையும் பொலிஸார் விசாரணைக்காக ஆய்வு செய்து வருகின்றனர்.