டிசம்பர் 05: ஆளுமை என்ற இமயம் ஜெயலலிதா மறைந்த நாள்

மறைந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டி நினைவு நாள் இன்று.

2016 ஆம் ஆண்டு, தமிழக முதல்வராகப் பதவியில் இருக்கும்போதே, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 5 ஆம் திகதி ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழக அரசியலில் ஜெயலலிதாவினால் ஏற்பட்ட வெற்றிடம் இன்று வரை நிரப்பப்படாத ஒன்று.

சொல்லப்போனால் தமிழக அரசியலை ஜெ.இறப்புக்கு முன், ஜெ. இறப்புக்கு பின் என பிரிக்கலாம்.

திரைவாழ்க்கையில் தொடங்கிய அவரது பயணம் அரசியலில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளுமையின் சிகரம் ஜெயலலிதா என்றால் மிகையல்ல. அவரது மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரும் குழப்ப நிலையே உள்ளமை குறிப்பிடத்தக்கது.