டிரம்ப் அறிவிப்பினை அவுஸ்திரேலியா பின்பற்றாது!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பினை அவுஸ்திரேலியா பின்பற்றாது என வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போது Tel Aviv நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேமிற்கு மாற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியா இதனைப் பின்பற்றாது என வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) தெரிவித்துள்ளார்.

தற்போது இருப்பதைப் போல Tel Aviv-இலேயே அவுஸ்திரேலிய தூதரகம் இயங்கும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இஸ்ரேல்-பலஸ்தீன விவகாரத்தில் இரு தரப்பினரும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள் சமாதானமாக வாழ வழிசெய்யும் two-state தீர்வு திட்டம் ஏற்படுத்தப்படுவதை அவுஸ்திரேலியா விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.