டுபாய் நீதிமன்றத்தில் ஆஜராகிய மதுஷ் உள்ளிட்ட கும்பல்!

டுபாயில் கைதாகிய போதை பொருள் வர்தத்கரும் பாதாள குழு தலைவருமான மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 39 பேரும் இன்று அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

டுபாயிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை போதைப் பொருட்களுடன் இவர்கள் கைதாகியிருந்தனர்.

இதனை தொடர்ந்து தடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இவர்கள் இன்றைய தினம் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனைகளின் போது இவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதன்படி நீதிமன்றத்தினால் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்களாக இருந்தால் கடும் தண்டனைகளுக்கு இலக்காக நேரிடுமென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.