டென்னிஸ் போட்டியிலும் மாஸ் காட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தோனி!

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ராஞ்சியில் நடந்த உள்ளூர் டென்னிஸ் போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெறவில்லை. வீட்டில் ஓய்வு எடுத்து வரும் தோனி தன் மகளுடன் பொழுதை கழித்து வந்தார்.

இதனால் தோனி ஓய்வு பெற்றுவிடுவார், உலகக்கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார் என்று அவரை சுற்றி பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் தோனி சொந்த ஊரான ராஞ்சி மைதானத்தில் கன்ட்ரி கிரிக்கெட் சங்கம் நடத்திய டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டார்.

அதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் மற்றொரு உள்ளூர் டென்னிஸ் வீரருடன் ஜோடியாக பங்கேற்ற தோனி, இறுதிப் போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

சர்வதேச டென்னிஸ் போட்டியாக இல்லாவிட்டாலும், கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ் போட்டியிலும் மற்ற உள்ளூர் டென்னிஸ் வீரர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடி தோனி கோப்பையை வென்றது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

Tennis Champion 😎❤️

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhoni.fc) on