டோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை!

சென்னை சுப்பர் சிங்கஸ் அணி தலைவர் டோனியிடம் ரசிகை ஒருவர் வித்தியாசமான கேள்வியை கேட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியை காண வந்த டோனியின் ரசிகை ஒருவர் தனது கேள்வியின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளார்.

கொல்கத்தா மைதானத்தில் குறித்த பெண் ரசிகை கேட்ட கேள்வி ரசிர்கள் மட்டுமல்ல டோனியையும் நிச்சயம் அதிரவைத்திருக்கும்.

“என்னை உங்களுடைய பெரிய மகளாக ஏற்றுக்கொள்வீர்களா டோனி? நான் ஸிவாவை தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று ஒரு பேனரில் எழுதிவைத்து அந்த பேனரை கையில் வைத்த படியே போட்டியை பார்த்துள்ளார்.

டோனியை பார்த்து யாரும் இதுவரை கேட்காத கேள்வி என்பதால் அனைவரது பார்வையும் இந்த ரசிகையின் மீது திரும்பியுள்ளது.