தங்க பிஸ்கட்டுக்களுடன் கைதான மூவர்!-

இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாபோல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (10) இரவு 10.30 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த விமானத்தில் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் அரசுடமையாக்கப்பட்டதுடன் குறித்த நபருக்கு 5 இலட்சம் ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விமானத்தில் வருகை தந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 1,750,000 ரூபா பெறுமதியான 300 கிராம் நிறையுடைய மூன்று தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் அரசுடமையாக்கப்பட்டதுடன் குறித்த பெண்ணிற்கு 20,000 ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று இரவு 11.45 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து தங்க பிஸ்கட்டுக்களுடன் வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 7.1 மில்லியன் ரூபா பெறுமதியான 1.1 கிலோ கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.