தந்தையின் கண்முன்னே மகள் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!-

பீகாரில் 19 வயதான இளம்பெண் தந்தையின் கண்முன்னே 6 பேரால் கொடூரமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கிஷன்கஞ்ச் மாசட்டத்தில் உள்ள கோதிவாடி ( Kodhiwadi) என்ற கிராமத்தில் வீடு ஒன்றில் நுழைந்த கும்பல் அங்கிருந்த தந்தை மற்றும் மகளை சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆட்கள் நடமாட்டமற்ற இடத்துக்கு எடுத்துச் சென்றது.

தந்தையைத் தாக்கி மரத்தில் கட்டிவைத்த அந்த கும்பல், அவரின் கண்முன்னே மகளை கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.

இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டிச் சென்ற நிலையில், தந்தை கோதிவாடி காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 6 பேரை பொலிசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.