தந்தையை கொலை செய்து தாயின் முடியை வெட்டிய மகன்! இலங்கையில் நடந்த கொடூரம்

அம்பலந்தொட – அரவனமுல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்து முரண்பாட்டின் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அம்பலந்தொட – பெரகம – அரவனமுல்ல பிரதேசத்தினை சேர்ந்த 57 வயதுடைய இரு பிள்ளகைளின் தந்தையே தனது மகனின் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளது. குறித்த மகன், தாயையும் தாக்கி, தாயின் முடியை வெட்டியுள்ளார்.

35 வயதுடைய சந்தேக நபரான மகன் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், சந்தேக நபரை தேடி அம்பலந்தொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.