தந்தை மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்திய மகள்!

தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வற்புறுத்திய தந்தை மீது மகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வைக்க மறுத்து, தனது மதிப்பெண் சான்றிதழ்களை எடுத்து வைத்துக் கொண்டதாக தந்தை மீது மகள் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக 12ஆம் வகுப்பு படித்து முடித்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த மாணவி பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டு எண்ணுக்கு வாட்சப்பில் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தனக்கு இதழியியல் படிக்கவே விருப்பம், ஆனால் தன்னை பிஎஸ்.சி, இயற்பியல் அல்லது வேதியியல் படிக்க தனது தந்தை வற்புறுத்துவதாக அப்பெண் கூறுகிறார்.

“நான் என் தந்தைக்கு விருப்பமான படிப்பை தேர்வு செய்ய மறுத்துவிட்டதால், என் சான்றிதழ்களை தர மறுக்கிறார்,” என அந்த மாணவி தெரிவித்தார்.

பின்னர் அந்த மாணவியின் தந்தை சான்றிதழ்களை தர ஒப்புக் கொண்டதாக அவருக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.