தனிப் பயிற்சியில் களமிறங்கிய அஸ்வின்! அவுஸ்திரேலியாவை மிரட்டுவாரா..?

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு தமிழக வீரர் அஸ்வின் தனியாக பயிற்சி எடுத்து வருதாக தெரியவந்துள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் 4 ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த அஸ்வின் இந்த போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

இதனால் இந்த டெஸ்ட் போட்டிக்காக அஸ்வின் தனியாக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்.

சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமானது. ஆகவே அஸ்வினின் பங்களிப்பு இந்திய அணிக்கு அவசியம் என்பதால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரியவந்துள்ளது.