தனுஷ் படத்தின் பாடல்கள் யூடியூப்பில் இருந்து திடீர் நீக்கம்! காரணம் வெளியானது

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள் நீக்கப்பட்டுள்ளது.

என்னை நோக்கி பாயும் தோட்டா படம் எப்போது வெளியாகும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மறுவார்த்தை பேசாதே. விசிறி , நான் பிழைப்பேனா ஆகிய பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்பாடலாள் கவுதம் மேனனின் ஒன்றாக யூடியூப் சேனலில் வெளியானது.

தற்போது இப்படத்தின் இசை உரிமையை வாங்க சோனி நிறுவனம் முன் வந்துள்ளது. இதன் காரணத்தால் தான் பாடல்கள் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இப்படத்தின் பாடல்கள் ஒன்றாக யூடியூப் பக்கத்தில் கவுதம் மேனன் வெளிட்டார் . ஆனால் இப்போது பாடல்கள் பிரைவேட் செய்யப்பட்டதால் தான் ரசிகர்களால் அதைப் பார்க்க முடியவில்லை என்று தெரிகிறது.

இதற்கான ஒப்பந்தங்கள் முடிவடைந்தவுடன் மீண்டும் பாடல்கள் யூடியூப் தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.