தன் மகனை இறுக்கிக் கட்டிப்பிடித்த பிடி 330 அடி உயரத்திலிருந்து குதித்த தாய்!

கொலம்பியா நாட்டின் Tolima பகுதியில் உள்ள 330 அடி கொண்ட உயரமான பாலத்தின் விளிம்பில் இருந்து தாய் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விட்டு துரத்தப்பட்ட விரக்தியில் தாய், ஒருவர் தன்னுடைய 10 வயது மகனுடன் சேர்ந்து பாலத்தில் இருந்து குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் அறிந்து குறித்த இடத்திற்கு வந்த பொலிசார் சமரசம் பேசும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தனது முடிவில் தெளிவாக இருந்த தாய் தன்னுடைய 10 வயது மகனை நெஞ்சோடு சேர்ந்து அணைத்தவாறே குதித்தார்.

இதனை பார்த்ததும் பொதுமக்கள் அனைவரும் கண்கலங்க ஆரம்பித்துவிட்டனர். பொலிஸாரும் ஒருவரை ஒருவர் கட்டியணைப்படி தேற்ற ஆரம்பித்து விட்டனர்.

தற்கொலை செய்துகொண்ட தாய் 32 வயதான ஜெஸி பாவோலா மோரேனோ குரூஸ் மற்றும் அவருடைய மகன் மே சேபாலஸ் என தெரியவந்துள்ளது.

நிதி பற்றாக்குறை காரணமாக அந்த பெண் வாடகை கொடுக்க முடியாமல் தவித்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு துரத்திய விரக்தியில் இந்த முடிவை எடுத்திருப்பதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரின் உடல்களையும் தேடும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன் மேலதிக விசாரணையும் நடைபெறுகிறது.