சசியின் முதலமைச்சர் பிரவேசம்: பழ.நெடுமாறன் வாழ்த்து.!!

தமிழகதில் ஏற்பட்டிருக்கும் சடுதியான அரசியல் மாற்றங்கள் தொடர்பில் அரசியல் பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக திருமதி சசிகலா அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஆதரவாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை சசிகலா அம்மையாரும் செயல்படுத்துவார் என நம்புகிறேன்.

மறைந்த முதல்வரின் காலத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இவரும் அதைப் பின்பற்றி எஞ்சிய மதுக்கடைகளையும் மூடவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

7 பேர் விடுதலை உட்பட 15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென வேண்டிக் கொண்டு எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன், என தனது ஊடக அறிக்கையினில் தெரிவித்துள்ளார்.