தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையின் பலத்தைக் காட்ட வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது வீட்டில் இன்று மாலை ஊடகவியிலாளர் சந்திப்பை நடாத்தியிருந்தார்.

அச் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது..

யாழ் பல்கலைக்கழக சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள போராட்டமானது தமிழ் மக்களுடைய அடிப்படைய உரிமைகளைக் கேட்டு அதற்கு ஆதரவாகவும் பலம் கொடுக்கக் கூடிய வகையிலும் மக்கள் திரண்டு வந்து அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனென்றால் இன்றிருக்கின்ற சூழ்நிலையிலே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்ற போது

தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையின் பலத்தைக் காட்டுவதன் மூலம் தான் ஏதாவது ஒரு சிறிய விடயங்களையாவது அங்கு சாதிக்கக் கூடியதாக இருக்கும்.

ஆகவே அனைவரும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சுமந்தனின் வீடு மற்றும் வாகனம் அந்த வீடு சம்மந்தர் அண்ணருக்காக கட்டப்பட்ட வீடு அல்ல. அப்படி ஒரு வீடு நீண்ட காலமாக இருக்கிறது.

அந்த வீட்டிலே பதவி வழி வரக் கூடிய அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என இப்படி யாருக்காவது கொடுப்படும்.

அது ஒவ்வொரு பாராளுமன்றமும் புதிதாக வருகின்ற போது அதனை மாற்றிக் கொடுப்பது வழக்கம்.

சம்மந்தர் அண்ணன் எதிர்க்கட்சித் தலைவராக வந்த போது அவருக்கு அந்த வீடு வழங்கப்பட்டது. ஆனால் அந்த வீடு சொந்தமாக வழங்கப்படவில்லை. அவருடைய பதவிக் காலம் முடிவடைகின்ற போது அந்த வீடு அவரிடமிருந்து எடுக்கப்படும்.

இப்போது எதிர்க்கட்சித் தலைவராக வந்திருக்கக் கூடிய மகிந்த ராஜபக்ச தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

ஏனென்றால் தான் இப்போது இருக்கக் கூடிய முன்னாள் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட அந்த வீடு என்பது இதனைவிட வசதியாக இருப்பதால் தான் அதிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.