தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர் சிக்கினார்!

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் ரிஸ்வான் என்பவர் வத்தளை – மாபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மொஹமட் ரிஸ்வான் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபரிடமிருந்து 05 கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மொஹமட் ரிஸ்வானை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.