தலமைத்துவத்திற்கு 2வது சவால்: அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் பரபரப்பு!

அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்க்கு எதிராக மீண்டும் தலைமைத்துவ சவாலை முன்வைக்கவுள்ளதாக பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

இன்று (23) காலை பிரதமரைத் தொடர்புகொண்டு பேசிய அவர் இந்த சவாலினை முன்வைத்துள்ளார்.

வாக்கெடுப்பு நடத்துவதற்காக கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தைக் கூட்டவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்ததுடன் 2வது தலைமைத்துவ சவாலில் வெல்வதற்குத் தேவையான வாக்குகளைப்பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை பீட்டர் டட்டனிற்கு எதிராக Treasurer-கருவூலக்காப்பாளர் Scott Morrison போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை Mathias Cormann, Michaelia Cash ,Mitch Fifield ஆகிய 3 முக்கிய அமைச்சர்கள் பதவி விலகலை அறிவித்துள்ளனர்.

மேலும் பீட்டர் டட்டடனுக்கு அவர்கள் தமது ஆதரவை தெரிவித்ததுடன் பிரதமருக்கு கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு இல்லை என அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கருவூலக்காப்பாளர் Scott Morrison தலைமைத்துவப் போட்டியில் களமிறங்குவது அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.