தலைமுடிக்கு சிறந்தது தேங்காய் எண்ணெய்!-

தேங்காய் எண்ணெய் தடவுவதால் புதிதாக முடி முளைக்காது என்பது உண்மைதான். ஆனால், முடியை சீரமைப்பதில் கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்தது எனக் கூறப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் என்பது Triglyceride of Lauric Acid. முடியில் உள்ள ப்ரோட்டீன்களுக்கு அதிக ஈர்ப்பு உடையது.

மற்றும் நேரான செயின் போன்ற அமைப்பு உடையது என்பதால், தேங்காய் எண்ணெயால் மட்டுமே முடியின் உள்ளே ஊடுருவ முடியும்.

அதேநேரத்தில், தேங்காய் எண்ணெயை அதிகமாக உபயோகப்படுத்தினால் தலையில் பொடுகை உருவாக்கக்கூடிய முக்கிய பூஞ்சையான Malascezia Furfur அதிக அளவில் வளர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, தினசரி தலையில் அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக,

தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும் என்பதை உணர வேண்டும்.

எண்ணெயோ அல்லது கிரீமோ அரை மணி நேரத்துக்கு முன்பு தலைமுடியில் தேய்த்து வைத்து, மிதமான சூட்டில் துண்டை நனைத்து தலையில் கட்டி வைப்பார்கள். அப்படி செய்யும்போது முடியின் உள்ளே கண்டிஷனர் நன்றாகச் செல்லும்.