தலை நகரிலிருந்து ஆரம்பமாகிய இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!

டெப் கணனி மூலம் பாடங்களை செய்யும் முறைமை தலை நகரான ஶ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை ஆண்கள் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த பாடசாலையின் 8ஆம் தர மாணவர்கள் இந்த கணனி பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் வெற்றிகரமாக அதனை செய்வதாக அவர்களின் வகுப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கொப்பி , புத்தகங்களுக்கு பதிலாக அதனையே பயன்படுத்துகின்றனர்.

அவர்களிடம் பேனை , கொப்பி , புத்தகங்கள் எதுவும் கிடையாது. முற்றுமுழுதாக அனைத்து பாடங்களையும் அந்த கணனி மூலமே செய்கின்றனர்.