தவணைப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படாமல் கல்விச் செயற்பாடுகளை நடத்திச் செல்வது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.