தாக்குதல்தாரியை துணிச்சலுடன் பிடித்த ரியல் ஹீரோ: வைரலாகும் வீடியோ

நியூசிலாந்தின் Christchurch நகரில் இன்று (15) உள்ளூர் நேரப்படி மதியம் 1.40 மணிக்கு மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இதில் ஒருவனை பொலிசார் தைரியமாக கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், சாலையில் ஓரத்தின் கார் ஒருபக்கமாக சாய்ந்தபடி நின்ற நிலையில் கார் உள்ளே துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்ட நபர் இருப்பதை குறித்த வீடியோவில் காணலாம்.

அவரிடம் ஆயுதம் இருக்குமென்று தெரிந்தும் துணிச்சலாக இரண்டு பொலிசார் அருகில் சென்று துப்பாக்கியை காட்டி அவனை கீழே இறங்க கூறுகிறார்கள்.

அதில் ஒரு பொலிஸ் அதிகாரி கார் உள்ளே சென்று உள்ளிருந்த நபரை வெளியில் இழுத்தார். பின்னர் அவனை அதிரடியாக கைது செய்தார்.

பொலிசாரின் கார், தாக்குதலில் தொடர்புடைய நபரின் காரின் மீது மோதியதை அடுத்தே அந்த கார் ஒரு பக்கமாக சாய்ந்து சாலை ஓரத்தில் நின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது சம்மந்தமான வீடியோ வைரலாகியுள்ள நிலையில் அந்த நபரை துணிச்சலாக பிடித்த பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகிறது.