தாயை கொடூரமாக கொலை செய்த மகன்! விசாரணைக்கு சென்ற அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

தனது தாயை பொல்லுவொன்றால் தாக்கி அவரது மகன் கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி – அயகம – கவரகிரிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளது.

80 வயதுடைய வயோதிப தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று குறித்த தாய் வீட்டில் இருந்த போது 40 வயதுடைய அவரது மகன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் , சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அயகம பொலிஸார் அதிகாரியொருவர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது , குறித்த பொலிஸ் அதிகாரியின் தாயாரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.